[ad_1]




Tiruchirappalli: திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

 




 

இவர் தேனி மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து பெண் குழந்தைகளை கொண்டு வந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அரசு அனுமதியின்றி  மோசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகியும் பாதிரியாருமான கிதியோன் ஜேக்கப், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

 

அடுத்து அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் பெற்று இருந்த கிதியோன் ஜேக்கப், ஜெர்மனி தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.

 

  கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிதியோன் ஜேக்கப், நேற்று ஜெர்மன் நாட்டில் இருந்து திருச்சி வந்த அவரை சென்னையில் சி.பி.ஐ போலீசார கைது செய்யப்பட்டார். பின்னர் நேற்று இரவு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப்   கைது பெரும் பரப்பை உண்டாக்கியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்