[ad_1]
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் டி.வி.புரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரின் மகள் அகிலாவை ஷபின் ஜகான் என்பவர் ஹைதியா என பெயரிட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றித் திருமணம் செய்துகொண்டதாக புகார் எழுந்தது. இந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருமணத்தை ரத்து செய்தது.
ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய விசாரணை முகமை விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அகிலா தற்போது தந்தையின் வீட்டில் உள்ளார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹைதியாவை நவம்பர் 27ம் தேதி மாலை 3 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரின் தந்தைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் முன், ஹைதியா தன் தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேஜரான பெண் கூறும் கருத்துகளை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது என அந்த அமர்வு தெரிவித்துள்ளது.
லவ்ஜிகாத் திருமணங்கள் குறித்து தேசிய விசாரணை முகமை கேரளாவில் விசாரணை நடத்தி வருகிறது. இஸ்லாம் மதத்திற்கு மாறிய இரு பெண்களிடம் விசாரணை நடத்திய போது 'கட்டாயத்தின் பேரில் மதம் மாறவில்லை' எனத் தெரிவித்துள்ளனர். கோழிக்கோட்டில் உள்ள, தெர்பியத்துல் இஸ்லாம் சபா என்ற கேரள அரசு சார்ந்த அமைப்பு அகிலாவை மதம் மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுபோல், கேரளாவில் 32 இந்துப் பெண்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவி இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளனர்.
அகிலாவுக்கு தற்போது 24 வயதாகிறது. அகிலாவின் ஒவ்வொரு அசைவயும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தற்போது, தன் பெற்றோரை இஸ்லாம் மதத்துக்கு மாற அவர் வற்புறுத்தவதாகச் சொல்லப்படுகிறது. 12-ம் வகுப்பு பாஸ் ஆன பின்னர், 18 வயதில் சேலத்தில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிக்கச் சேர்ந்தார். சேலத்தில் படிக்கும்போது, 5 தோழிகளுடன் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். இதில், ஜசீலா, ஃபாஷினா என்ற இருவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். அதுவரை, கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டிருந்த அகிலா, குரான் படிக்க ஆரம்பித்துள்ளதோடு, அதிலிருந்து கருத்துகளை எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிபட தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஷபின் ஜகானைத் திருமணம் செய்து கொண்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
லவ்ஜிகாத் வழக்கில் ஹைதியாவை உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!
TAGS :
COMMENTS