[ad_1]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-ம் ஆண்டு மற்றும் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ-கள் மற்றும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இவர்களைத் தொடர்ந்து பொதுமக்கள் திரளாக வந்து தேவர் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்தனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து மரியாதை செய்தனர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் பாதுகாப்புக்காக மாநகர சட்டம் & ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, இதர பிரிவுகளான, ஆயுதப்படை, குதிரைப்படை, துப்பறியும் நாய் படை பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 3,000 காவல்துறையினர், அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மதுரை தேவர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ’பி.ஜே.பி சார்பாகவும் மத்திய அரசு சார்பாகவும் தேவர் அவர்களுக்கு மரியாதை செய்தோம். நேர்மையாகவும் துணிச்சலாகவும் ஆட்சி அமைய வேண்டும் என்று அப்போது நினைத்தார். அந்த ஆசை தற்போது மோடி ஆட்சியில் அரங்கேறியுள்ளது. அதை விண்ணுலகில் இருந்து பார்த்துவருகிறார். தேவர் தன்னுடைய வாழ்க்கையில் எதை மையமாக வைத்து வாழ்ந்தாரோ அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். தேவருக்கு சிலை வைப்பதோ, படங்கள் வைப்பது மட்டுமே முக்கியம் அல்ல அதையும் தாண்டி அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவதே கடமை’ என்றார்.
பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகத்தில் சமூக நீதி நிலைக்க வேண்டும், பெரியார், தேவர் ஆகியோர் கடைப்பிடித்து வந்த சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும், தமிழ் நாட்டில் அநீதி ஆட்சி நடைபெறுகிறது. முக்குலத்தோருக்கு தனி இட ஓதிக் கிடு தர வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் அனைத்து சமுகத்தினருக்கும் இட ஒதிக்கீடு தர வேண்டும்” என்று கூறினார் உடன் பா.மா.க நிர்வாகிகள் , செல்வம், கிட்டு, பாலமுருகன், ஆசைகுமார், சோபனா ஆகியோர் உடன் இருந்தனர். ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்திய நாட்டுக்காக சிறைவாசம் கண்டவர் தேவர், நேதாஜி அவர்களின் சேனாதிபதியாக விளங்கியவர் எனத் தெரிவித்தார். தொடர்ச்சியா 42 வருடங்களாக தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறேன். அனைவரும் சமுதாய ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். சாதி, மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும்'' என்றும் வைகோ வேண்டுகோள்விடுத்தார் .
மதுரையில் தேவரின் ஆண்டு விழா! - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
TAGS :
COMMENTS