
[ad_1]
உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,174 அளவுக்குக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’நாடு முழுவதும் உச்ச நீதிமன்றம் உள்பட மற்ற நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. அதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாய் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை 60,000-த்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பதவியேற்றபோது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 57,774 ஆக இருந்தது. இரண்டு மாத இடைவெளியில் அக்டோபர் 27 வரையிலான காலகட்டம் வரை அந்த எண்ணிக்கை 2,174 என்ற எண்ணிக்கை அளவுக்குக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அக்டோபர் 27-ம் தேதி வரையிலான இரண்டு மாதத்தில் புதிதாக 7,021 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், 9,195 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 55,600 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
COMMENTS