[ad_1]





பிரம்மபுத்திரா நதியை வழிமறிக்கும் கட்டுமானம் குறித்தத் திட்டம் எதுவும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது. 





சீனாவிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் ஆறு பிரம்மபுத்திரா. இந்தியாவின் மிகப் பெரிய ஆறானா பிரம்மபுத்திரா, அஸாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்கு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே நீரை தடம் மாற்றும் கட்டுமானத்தை சீனா மேற்கொள்ளப் போகிறது என்று செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து  சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹா சன்யங் கூறுகையில், 'பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா கட்டுமானப் பணியை தொடங்கவுள்ளது என்பது தவறான செய்தி. நாடுகளுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டை சீனா தொடரும். இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு வழங்கப்படவேண்டிய நீரை அணை கட்டி சீனா சேமிக்காது' என்று தெரிவித்தார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்