[ad_1]
மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்க கோரி உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொண்டு தர்ணா செய்த இலங்கை வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கொழும்புவில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ்கோடி பகுதிக்கு கள்ளத்தனமாக வந்தவர் அஜாய் (24). போலீஸாரால் பாஸ்போர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிவுக்கு பின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மண்டபத்தில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அஜாய் திடீரென முகாமில் இருந்து மாயமானார். இதன் பின் பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்த அஜாய் இன்று மண்டபம் முகாமிற்கு வந்துள்ளார். அங்குள்ள அலுவலர்களிடம் தான் இலங்கை அகதி எனவும், அதனால் அகதி முகாமில் தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். ஆனால் அகதிக்கான எந்த ஆவணங்களும் அஜாயிடம் இல்லாததால் அகதி முகாம் அலுவலர்கள் அவரை முகாமிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து தான் கொண்டு வந்திருந்த கண்ணாடி துண்டினால் கழுத்து மற்றும் கை கால்களில் கீறிக்கொண்டு மண்டபம் முகாமின் முன்பு தர்ணா செய்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் அஜாயை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் முகாம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
அகதிகள் முகாமில் அனுமதிக்கக்கோரி உடம்பை கீறிக் கொண்ட இலங்கை வாலிபரால் பரபரப்பு!
TAGS :
COMMENTS