[ad_1]

சிவகங்கை மாவட்டம், மலம்பட்டி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றன. மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, பொதுமக்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம், நலத்திட்ட உதவிகள் குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றார்கள்.





புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து  கொள்வதற்கும் உதவியாக இருந்ததாக தெரிவித்தனர்.