[ad_1]
விராட் கோலியை வாழ்த்துவதற்காக மைதானத்துக்குள் புகுந்த ரசிகரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோகித் ஷர்மா மற்றும் கேப்டன் விராட் கோலியின் சதங்களின் உதவியால் 337 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 147 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் எடுத்தனர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 32ஆவது சதத்தைப் பதிவு செய்த விராட் கோலியை வாழ்த்துவதற்காக ரசிகர் ஒருவர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி மைதானத்துக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மைக்கேல் சாட்னர் வீசிய 44ஆவது ஓவரில் ஒரு ரன் எடுத்து சதமடித்த விராட் கோலியை நோக்கி ஓடிய அந்த ரசிகரை லெக் அம்பயர் தடுத்து நிறுத்தினார். விராட் கோலி பெயருடன் கூடிய ஜெர்ஸியை அணிந்தபடி மைதானத்துக்குள் சென்ற அந்த ரசிகரால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. இதையடுத்து மைதான காவலர்கள் அவரை வெளியில் அழைத்துச் சென்றனர். பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் சென்ற அந்த ரசிகரை போலீஸார் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
விராட் கோலியை வாழ்த்த மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்!
TAGS :
COMMENTS