[ad_1]
Puducheri: புதுச்சேரி நகரப்பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் உள்பட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள மார்க்கெட் வளாகம் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த சிலவருடங்களுக்கு முன்பு மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடிக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட அந்தப் பகுதியை ஆய்வு செய்யச் சென்றிருந்தார்.
அதனை அறிந்த அந்தத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், “இந்தப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இதற்கு மட்டும் ஏன் வருகிறார்” என்ற கோஷத்தோடு கிரண்பேடிக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அதையடுத்து காவல்துறை எஸ்.பி வேங்கடசாமி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கிரண்பேடி வந்த பின்பும் கறுப்புக் கொடி காட்ட முயன்றதால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைதுசெய்தனர். மார்க்கெட்டை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்த கிரண்பேடி “அதிமுகவினர் கருப்பு கொடி காட்டியதற்கு தனக்கு கவலையில்லை. என் பணியை நான் செய்கிறேன்” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
'இதற்கு மட்டும் ஏன் வருகிறார்?' - கிரண்பேடிக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் கொந்தளிப்பு
TAGS :
COMMENTS