[ad_1]
’இத்தாலியில், இந்திய மாணவர்கள் மீது நடந்துவரும் தாக்குதல்கள்குறித்து பயப்பட வேண்டாம். சூழ்நிலையை நானே தனிப்பட்ட முறையில் கையாளுகிறேன்’ என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தாலி நாட்டின் தலைநகர் மிலன் நகரில், இந்திய மாணவர்கள் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல்களை இத்தாலியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
ஐரோப்பாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவருகிறது. தற்போது, மிலன் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் தாக்குதல்கள்குறித்தும், இத்தாலி அரசிடம் இத்தாலிக்கான இந்தியத் தூதரகம் முறையான புகார் அளித்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தீர்வு கிடைக்க, தானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “மிலன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதுகுறித்து முழுத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். நானே தனிப்பட்ட முறையில் இதை கவனிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது தாக்கு: கவலை வேண்டாமென சுஷ்மா ட்விட்!
TAGS :
COMMENTS