[ad_1]
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் சுற்றுப்புறத்தைச் சரியாகப் பராமரிக்காத கோழிக்கடை உரிமையாளர்களுக்கு அப்பகுதியில் ஆய்வு செய்த கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் அபராதம் விதித்தார்.
கரூர் நகராட்சி வார்டு எண் 16 வஞ்சியம்மன் கோவில் தெரு,வாங்கப்பாளையம் சுப்பு கார்டன் பகுதி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி, தளவாபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற டெங்குத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் இன்று அதிகாலை முதல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், நகராட்சி ஆணையர் அசோக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சுதாமதி, புஞ்சை தோட்டக்குறிச்சி தோட்ட அலுவலர் பாலசுப்ரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், பூச்சியியல் வல்லுநர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், ’டெங்கு தடுப்புப் பணிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டு தண்ணீரில் குளோரினேட் செய்வது, படக்காட்சிகள் மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது, துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ளவும் கண்காணித்திடவும் 4,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் கடந்த ஒருமாதகாலமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டோருக்குத் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து, காலக்கெடு வழங்கப்பட்டது. காலக்கெடு முடிந்த நிலையில் ஆய்வு செய்யும் போது விதிமுறைகளை மீறுவோருக்குக் கூடுதலான அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.
அதைத்தொடர்ந்து வாங்கப்பாளையம் சுப்பு கார்டன் பகுதியில் கோழிக்கடை உரிமையாளர் ஒருவர், தனது கடையினுள் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, கொசுப்புழு உற்பத்தி ஆவதற்குக் காரணமாக இருந்ததால், இதைக் கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அபராதம் விதித்ததோடு,'இனிமேல் இப்படிக் கொசுப்புழு வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தினால், தண்டனை கடுமையானதாக இருக்கும்' என்று எச்சரிக்கை செய்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
டெங்குக் கொசு வளர்த்த கோழிக்கடைக்காரருக்கு அபராதம்! கலெக்டர் அதிரடி
TAGS :
COMMENTS