
2017-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் கூட்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஃஜெப்ரி சி ஹல், மைக்கேல் ரோஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சி (உயிர்க் கடிகாரம்) செயல்படும் முறையைக் (molecular mechanisms controlling the circadian rhythm) கண்டறிந்ததுக்காக மூவரும் நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளனர். நோபல் பரிசு பெறும் மூவருக்கும் ரூ.7 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்கப்படும்.
TAGS :
COMMENTS