[ad_1]
இன்றைக்கு இருக்கும் பொருளாதாரச் சிக்கலில் ஏழைக் குடும்பத்தின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஆடம்பரத் திருமணம் செய்துவைக்கத் தயங்கும் இந்தச் சூழலில், அதிரடியாக 9 இலவசத் திருமணங்களை நடத்திக் காட்டியுள்ளனர் ஓசூரைச் சேர்ந்த "அம்பேத்கர் ஜெய் பீம்பேரவை" இளைஞர்கள்.
வெட்டவெளியில் பிரமாண்ட அரங்கம் அமைத்து அதில் அம்பேத்கர், பெரியார், புத்தர் ஆகியோரின் உருவப் படம் பொறித்த பதாகைகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்தச் சாதி மறுப்பு திருமணத்தைக் காண ஆர்வத்துடன் வந்திருந்தனர். அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இதில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.
இது குறித்து ஜெய் பீம் பேரவையின் மாவட்டத் துணைத் தலைவர் முனிகிருஷ்ணன், கூறும் பொழுது "அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று நடக்கவேண்டிய திருமணம் தாமதமாக நடந்துள்ளது. இதற்கு முன்பு ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், இலவச லேப்டாப் போன்ற பொருள்கள்தான் கொடுத்து வந்தோம். இம்முறை மாற்றாக 9 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டோம்.
இந்தளவிற்கு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி"எனக் கூறினார். முகம் நிறைய மகிழ்ச்சியுடன் நின்றிருந்த திம்மராஜன் - மகேஸ்வரி என்ற ஜோடியிடம் பேசிய போது "ரொம்ப சந்தோஷமா இருக்கு. இலவசக் கல்யாண விளம்பரத்தைப் பார்த்து எங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டோம். எங்களுக்குத் திருமணமும் நடத்தி வைத்து, வீட்டுக்கு தேவையான உபயோகப் பொருள்கள் கொடுத்து எங்களின் வாழ்க்கையைத் தொடங்கிவைத்த டாக்டர் அம்பேத்கர் ஜெய் பீம் பேரவைக்கு நன்றிகள் " என்று தெரிவித்தனர். சாதி மாறி காதலித்தாலே கொலை பண்ற இந்தக் காலத்தில, சாதி மறுப்புக் கல்யாணம் செய்து வைப்பது வரவேற்கத்தக்கது. இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் இனி வரும் காலங்களில், இதுபோன்ற திருமணங்கள் அதிக அளவில் நடக்க வேண்டும்"எனப் பொது மக்களில் ஒருவரான சந்தோஷ் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஓசூரில் 9 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்..! அசத்திய அம்பேத்கர் பேரவை
TAGS :
COMMENTS