[ad_1]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் அம்மாபிள்ளை. 55 வயதான இவர், கடந்த திங்கள் அன்று விபத்தில் படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் கூடுதல் மருத்தவ வசதி தேவைப்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சையில் எந்த முன்னேற்றம் இல்லாத வண்ணம் இருந்துவந்துள்ளது அவர் உடல் நிலை. நிலைமை மோசமாகி கடந்த வெள்ளியன்று அம்மாபிள்ளை மூளைச்சாவடைந்தார். அதனை தொடர்ந்து அவரது மகள் தாமரை, மருமகன் செந்தில் மற்றும் சகோதரார் ராமன் ஆகியோர் அம்மாபிள்ளையின் உடல் உறுப்பை தானமாக வழங்க ஒப்புக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட மருத்துவக்குழு உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம், அம்மாபிள்ளை உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், மற்றும் கண்கள் ஆகியவற்றை மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்களுக்கு பொருத்த முயற்சி எடுத்து ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நபருக்கு பொருத்தினர்.
இதன் மூலம் ஐந்து நபர்கள் பயன்பெற்றனர். இந்த முயற்சியை மதுரை அரசு மருத்துவக்குழு சற்றும் தாமதப்படுத்தாமல் விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடித்தனர் . இந்த முயற்சியால் 5 நபர்கள் பயன் பெற்றனர் அம்மாபிள்ளை இறந்தும் 5 நபருக்கு உதவியுள்ளார் என்பது பெருமைக்குரிய விசயமாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். அரசு மருத்துவமனை தொடர்ச்சியாக மருத்துவத்தில் நற்பணி செய்துவருவதாக ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பாராட்டினார் .
இறந்தும் 5 நபருக்கு உதவிய அம்மாபிள்ளை!
TAGS :
COMMENTS