[ad_1]

சென்னை: கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை அடாவடியாக கைது செய்தனர். அவர்களை தலைமன்னார் அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர். ஐந்து மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடரும் நிலையில் மீனவர்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகிறார்கள். வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!