[ad_1]
செப்டம்பர் மாதத்தில் வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானிய செய்தி நிறுவனம் அஷாகி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ''செப்டம்பர் 3-ம் தேதி வடகொரியா 6.3 ரிக்டர் அளவிலும் அதனைத் தொடர்ந்து 4.3 ரிக்டர் அளவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி கொண்ட இரு அணுகுண்டுகளை சோதனை செய்தது. இவை ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைக் காட்டிலும் 8 மடங்கு சக்தி வாய்ந்தவை. 120 கிலோடன் எடை கொண்டது.
இதன் காரணமாக, அணுகுண்டு சோதனை நடந்த Punggye-ri மலைப் பகுதியில் அணுகுண்டு சோதனை நடத்தும் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தரைக்கு அடியில் நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகள் மலைப்பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என வடகொரிய அதிபர் கிம்மை புவியியல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, புகுஷிமாவில் ஏற்பட்டது போல கதிர்வீச்சு வெளியாகியுள்ளது'' என்று கூறியுள்ளது.
Punggye-ri மலைக்கு அடியில்தான் வடகொரியா தொடர்ச்சியாக அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. இதுவரை 6 முறை அணுகுண்டுகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன விஞ்ஞானி வாங் நயான் கூறுகையில், ''100 கிலோடன் என்பது அதிக சக்தி கொண்டது. வடகொரியாவின் அணுகுண்டு சோதனையால் அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் அருகிலுள்ள நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கதிர்வீச்சு ஏற்பட்டால், சீனாவும் பாதிப்புக்குள்ளாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனையில் முதன்முறையாக உயிர்கள் பலியானதாக வெளியானத் தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இடிந்து விழுந்த சுரங்கத்தின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. வடகொரிய அரசிடம் இருந்து எந்த விஷயத்தையும் கறந்து விட முடியாது. பிற செய்தி நிறுவனங்களால் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. அஷாகி செய்தி நிறுவனம், 'வடகொரியாவில் இருந்து கிடத்த நம்பத் தகுந்தத் தகவல் இது ' எனத் தெரிவிக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வடகொரியா அணுகுண்டு சோதனை; சுரங்கம் இடிந்து 200 பேர் பலி!
TAGS :
COMMENTS