யோகாவுக்கு மதச் சாயம் பூசக் கூடாது. யோகாவை உலகிற்கு வழங்கியவர்கள் தமிழர்கள் தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் திரு உருவப்படத்துக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், யோகா தமிழர்களின் கலை. அதற்கு மதச் சாயம் பூசக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும், யோகா என்பது உடலுக்கும் மனதுக்குமான பயிற்சி. அதில் பக்தி மற்றும் மதத்தை கலக்கக் கூடாது. இதே காரணங்களைக் கூறி அதை நிராகரிக்கவும் கூடாது. யோகா கலைக்கு மதச் சாயம் பூசக் கூடாது. தமிழகர்கள் தான் யோகா கலையை உலகுக்கு வழங்கியவர்கள் என்றும் கூறினார்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் கருத்து கூறிவரும் நிலையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.

English summary


Naam Tamilar katchi coordinator Seeman expressed his views on Yoga and he told that need not neglect yoga because it is art of Tamil.