இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5-0 என, ஒரு தினப் போட்டித் தொடரில் வெல்வதற்கு தயாராகி வரும் நிலையில், இலங்கையின் அணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இந்திய வீரர்களுக்கு விருந்தளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்றுள்ளது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வென்று விட்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 4-0 என வென்றுள்ளது. நாளை 5வது ஒருதினப் போட்டி நடக்க உள்ளது.

இந்தத் தொடரில், கடைசி இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கும் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, இந்தத் தொடரில் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே, ஜிம்பாபாவே உடனான தொடரில் 2-3 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது.




சான்ஸ் போச்சு



இந்தியாவுடனான தொடர் தோல்வியால், 2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. கடைசி போட்டியில் வென்றாலும், வெஸ்ட் இன்டீஸ் அணியின் அடுத்த ஆட்டங்களைப் பொறுத்தே, நேரடியாக நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.






சாப்பிடுங்க பாஸ்



சாப்பிடுங்க பாஸ்



விளையாட்டெல்லாம் ஒருபுறம் இருக்க, தனது இந்திய நண்பர்களுக்கு விருந்தளித்து அசத்தினார் மலிங்கா. மைதானத்தில், வேகம், ஆக்ரோஷம் ஆகியவை இருந்தாலும், மைதானத்துக்கு வெளியே நண்பர்களாக பழகுவதுதான், உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அழகு.






மும்பை மலிங்கா



மும்பை மலிங்கா



அந்த வகையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்காக விளையாடி வரும் மலிங்கா, இந்திய வீரர்கள் பலருடன் இணைந்து ஏற்கனவே விளையாடியுள்ளார்.






நண்பேன்டா



நண்பேன்டா



ரோஹித் சர்மா,, ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் படேல், அஜிங்கியா ரகானே ஆகியோருடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால், அவர்களுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.






நாளை கடைசி போட்டி



நாளை கடைசி போட்டி



நாளை கடைசி போட்டி நடக்க உள்ள நிலையில், நேற்று இரவு, இந்திய வீிரர்களுக்கு தனிப்பட்ட முறையில் விருந்து அளித்து தனது நட்பை வெளிப்படுத்தினார் மலிங்கா.






கோஹ்லி மகிழ்ச்சி



கோஹ்லி மகிழ்ச்சி



கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர், மலிங்காவுடன் எடுத்தப் படங்களை பேஸ்புக், டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

English summary


Srilankan fast bowler Lasith Malinga hosts dinner for Indian cricket players ahead of 5th ODI