தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் அக்கட்சி எம்.பி, ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் திமுக சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரியோ, அல்லது ஹைகோர்ட் உத்தரவில் மாற்றம் கோரியோ யாராவது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாகும்.

தங்கள் தரப்பை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என மனுவில் கோரப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் சிக்கலில் உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயங்குவதால், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

English summary


Caveat filed in Tamilnadu Local body elections case in Supreme Court by DMK Rep by Organisation Secretary RS Bharathi.