
வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் விவசாயத்தில் சாகுபடிப் பரப்பு குறைப்பதற்காக வெர்ட்டிக்கல் கார்டன் என்ற விவசாய முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையில் குறைந்த இடங்களில் பல அடுக்குகளை வைத்து அதில் தொட்டி அமைத்து விவசாயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயம் நேரடியாக நிலங்களில்தான் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் விவசாயம் பின்பற்றப்படுகிறது. இதுபோல பலபல விவசாய முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்து வந்தாலும் நீருக்கு அடியில் விவசாயம் செய்வதென்பது முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது. நீருக்கடியில் மின்சாரம் கொண்டுபோக முடிந்த விஞ்ஞானிகளால் விவசாயத்தைச் செய்ய முடியவில்லை. பல ஆண்டுகளாகச் செய்யாத முயற்சியை விஞ்ஞானிகள் இப்போது செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். தண்ணீருக்கு அடியில் விவசாயம் செய்யும் வழிமுறைகளைத் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
ஒரு காருக்கோ அல்லது விமானத்துக்கோ மாற்று எரிபொருளுக்கான தேவையை ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் பெற முடியும். ஆனால், விவசாயத்துக்கு மாற்று எந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் இருந்து பெறுவது?... இதற்கான மாற்றுத் தொழில்நுட்பத்தைத்தான் கலிஃபோர்னியாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் நீர் உயிரிச் சக்தி தொழில்நுட்பம். நீர்மூழ்கி ட்ரோன்களை வைத்துக்கொண்டு நீருக்குள் இருக்கும் விவசாய பரப்பை கவனித்துக் கொள்ளலாம். பயிர்களுக்குத் தேவையான வெளிச்சத்தையும் ட்ரோன் மூலம் கொடுக்க முடியும். இதற்கான ஆராய்ச்சியும் இதுவரை தொடக்க ஆராய்ச்சிக் கட்டத்தில்தான் இருக்கிறது. இது கலிஃபோர்னியாவிலுள்ள கேத்தோலினா ஐலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் உயிர் எரிபொருளானது புதைபடிவ எரிபொருளான டீசல் போன்ற பொருள்களுடன் விலையை ஒப்பிடும்போது இரண்டுமே சமமாக இருக்கும்.
நீர் உயிரிச் சக்தி தொழில்நுட்பத்தில் வளர்க்கப்படும் தாவரங்கள் அனைத்தும் நீண்ட பைப்புகளின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தின் சோதனை வெற்றியடைந்தால் கலிஃபோர்னியா மற்றும் ஹவாய் தீவுகளில் திறந்த கடல் பண்ணையை அமைத்து செயல்படுத்தப் போகிறார்கள். இவ்வாராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பசிபிக் வடமேற்கு ஆய்வகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த ஆய்வகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதால் உயிரியல் ரீதியால் வெற்றியடையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதன் முதல்கட்டமாக இயற்கை எரிபொருள்களை உருவாக்கும் தாவரங்களைத்தான் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இத்தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்வது சாத்தியம் என்றாலும் கூட, சில விவசாயப் பொருள்களை நேரடியாகத் தண்ணீரில் உற்பத்தி செய்ய முடியாது. இந்த ஆராய்ச்சிகளால் நாள்கள்தான் வீணாகும் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். இருந்தாலும் நீருக்கடியில் விவசாய ஆராய்ச்சி முழுமூச்சோடு நடந்து வருகிறது. ஆனால், இதையெல்லாம் கடலுக்கு அடியில் செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சி, இதற்கு அடுத்த கட்டமாகத்தான் தொடரும் எனவும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடலுக்கு அடியில் வளரும் பயிர்களுக்கு நேரடியாக உரங்களைக் கொடுக்க முடியாது. அதற்கும் தனியாகக் குழாய்கள் அமைக்கலாம். இதுதவிர, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் மூலமும் உரங்களைக் கொடுக்கலாம். இப்பயிர்களுக்கு முக்கியமான தேவை சூரிய வெளிச்சம். இதற்காக ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இம்முயற்சி சோதனை இடங்களில் வெற்றி காணப்பட்டால், உடனடியாகக் கடலில் செய்துவிட முடியாது. அதற்காகத் தேர்ந்தெடுக்கும் இடம் கடற்பகுதியில் புயல் வராமலும், கப்பல்கள் வராத பகுதியாகவும், தண்ணீர் அதிகம் மாசுபாடு அடையாததாகவும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகள் அடுத்தகட்டமாக ஆரம்பிக்கும்.
எல்லாம் சரிதான், இறுதியாக இவர்கள் சொல்லும் கருத்து, இத்தொழில்நுட்பத்தை வடிவமைத்து வெற்றி கண்டால் செயல்படுத்த பல லட்சம் ரூபாய் செலவாகுமாம்... இது சாத்தியமானால் கடல் நீரிலும் பிளாட்டுகள் பிரிப்பார்கள் போல!
மாடித்தோட்டம்... வெர்ட்டிகள் கார்டன்... அடுத்து கடலுக்கடியில் விவசாயம்..!
TAGS :
COMMENTS