
கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை மாநகர இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மனைவியான நடிகை லாரா தத்தா வீட்டுக்குள் மழை நீர் வராமல் தடுக்க என்ன செய்திருக்கிறேன் பாருங்கள் என போட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. லாரா தத்தா தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், வீட்டுக்குள் மழைநீர் வராமல் இருக்க விம்பிள்டன், யுஎஸ் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் மகேஷ் பூபதி பயன்படுத்திய டவல்களை தடுப்புகளாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார். லாரா தத்தாவின் இந்த பதிவுக்கு கோபத்தை வெளிக்காட்டும் விதமாக பதில் போட்டிருக்கிறார் மகேஷ் பூபதி.
https://twitter.com/Maheshbhupathi/status/902481261180084225
லாரா தத்தா, மகேஷ் பூபதியின் இந்த ட்விட்டர் பதிவுகளில் ரசிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். டென்னிஸ் வீரர்களைப் பொறுத்தவரையில் போட்டிகளில் பயன்படுத்தும் டவல்களை நினைவு பொக்கிஷமாக கருதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/LaraDutta/status/902479760214786048
மழைநீரை தடுக்க கிராண்ட் ஸ்லாம் போட்டி டவல்களை பயன்படுத்திய மகேஷ் பூபதி மனைவி லாரா தத்தா
TAGS :
COMMENTS