கனமழை தொடருவதால் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை கனமழை புரட்டி எடுத்து வருகிறது. கடல் சீற்றமும் அதிகரித்து பேரலைகள் தாக்கி வருகின்றன.

இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் முடங்கியது.

இதையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே மும்பையில் கனமழை தொடருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமையும் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் வினோத் டாவ்டே அறிவித்துள்ளார்.

English summary


Maharashtra Education Minister Vinod Tawde said that all educational institutions in Mumbai to remain closed tomorrow.