மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் டிராபிக் நெரிசல் அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில், மும்பையின் சில பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

மும்பை சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று கொண்டு உள்ளன, இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.




சிக்கியவர்கள் கருத்து



#MumbaiRain என்ற ஹேஷ்டேக் மூலம் மும்பை மழை குறித்து டிவிட்டரில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். படங்கள், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்கள். தாங்கள் மழையில் சிக்கியுள்ளது குறித்து இதன் மூலம் அவர்கள் உலகிற்கு எடுத்துக் கூறி வருகிறார்கள்.






ரெய்னா எங்கே சிக்கியுள்ளார் பாருங்க



ரெய்னா எங்கே சிக்கியுள்ளார் பாருங்க



ஆனால், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இதே #MumbaiRain ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தண்ணீரில் நீந்தும் காட்சியை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த யாருக்குமே ரெய்னா வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பதை போலத்தான் தோன்றும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு.










மழைக்கு நடுவே நீச்சல்



ரெய்னா நீச்சல் குளம் ஒன்றில், நீந்திக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோவைத்தான் ஷேர் செய்துள்ளார். மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில், அதன் இரைச்சலும் வீடியோவில் கேட்கிறது. மழையில் நனைந்தபடியே குளத்திலுள்ள தண்ணீரில் நீந்தியபடி கரையை நோக்கி வருகிறார் ரெய்னா. அன்பும், ஊக்கமும், சுய உந்துதலும் உங்கள் இலக்கை அடையச் செய்யும் என்று அந்த வீடியோவுக்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார் ரெய்னா.






ஜாலி மூட்



ஜாலி மூட்



இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணியில் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே மும்பையில் மழைக்கு நடுவே நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளித்து ஆட்டம் போட்டுக்கொண்டுள்ளார் ரெய்னா.

English summary


"Love,encouragement & self motivation keeps you focused on your goal.As they say "The only journey is the one within" Says Suresh Raina while swim in a pool.