மதுரை மாவட்டத்தில் 'புளுவேல்' எனப்படும் ஆன்லைன் விளையாட்டை விளையாடிவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை திருமங்கலம் மொட்டைமலையை அடுத்த கலைஞர் நகரை சார்ந்த ஜெயமணி , டெய்சிராணி இவர்களது இரண்டாவது மகன் விக்கி என்ற விக்னேஷ் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். அவர் மொபைல்போனில் 'புளுவேல்' என்று சொல்லக்கூடிய  ஆன்லைன் விளையாட்டை 1,615 மணி நேரம் தொடர்ச்சியாக விளையாடிவந்துள்ளான் . இந்த மனநிலை மாற்றுவிளையாட்டை விளையாடிய விக்னேஷ் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.



புளுவேல் என்று சொல்லக்கூடிய ஆன்லைன் மனநிலை மாற்றுவிளையாட்டால் உயிர் பலியான சம்பவம் தமிழகத்தில் தற்போது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது . இறந்த விக்னேஷ் உடல் திருமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்பே முழுமையான தகவல் கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.



விக்னேஷின் கையில் திமிங்கலம் போன்ற அமைப்பில் இருக்கும் படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.