
ட்வீட் மூலமாகப் பரபரப்பாக தமிழக அரசியலை அவ்வப்போது விமர்சித்து வருகிறார் நடிகர் கமல். கமலின் ட்வீட்டுகள் அனைத்தும் அ.தி.மு.க அரசாங்கத்தை விமர்சிப்பதாகவே உள்ளன. இதனால், அவரின் மீது கடும் கோபத்தில் உள்ளது அ.தி.மு.க அரசு.
மேலும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இந்த விமர்சனங்களை ஏன் முன்வைக்கவில்லை என்ற கேள்வியும் அவ்வப்போது அ.தி.மு.க சார்பாக எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று அ.தி.மு.க அரசின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. இதன்பிறகு, தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களும் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்களின் இந்த இணைப்புக்குப் பிறகு, அமைச்சர்கள் பதிவுயேற்பும் நடைபெறயுள்ளது.
இந்நிலையில், தற்போது அ.தி.மு.க-வின் இரு அணிகளின் இணைப்பு குறித்து நடிகர் கமல் ட்வீட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் கமல், ''காந்திக் குல்லா! காவிக் குல்லா! கஷ்மீர் குல்லா! தற்போது கோமாளிக் குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா'' என்று கூறியுள்ளார்.
'தமிழன் தலையில் கோமாளிக்குல்லா' - கமல்ஹாசன் கடும் விமர்சனம்
TAGS :
COMMENTS