சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவச ஆட்டோ சர்வீஸ் செய்யப்படுவதாக அந்த பகுதியில் ஒரு ஆட்டோ உலா வந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் உடல்நலம் பெற அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், பூஜைகள் நடத்தி வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை வளாகத்திலேயே அதிமுகவினர் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர். ஏராளமான அதிமுகவினர் தினந்தோறும் குவிந்து வருவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அங்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவச ஆட்டோ சர்வீஸ் செய்யப்படுவதாக ஆட்டோ ஒன்று அந்த பகுதியில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளதால் அங்கு உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவச ஆட்டோ சர்வீஸ் செய்யப்படும். இந்த சர்வீஸ் அம்மா அவர்கள் விரைவில் குணமடைந்து போகும் வரை நடைபெறும். அம்மா குணமடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.
ஜெயலலிதா குணமடையும் வரை அப்பல்லோவுக்கு ஆட்டோ இலவசம்
TAGS :
COMMENTS