சென்னை: தமிழக முதல்வரின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரி மறைவிற்கு அஞ்சலி செலுத்த சசிகலா செல்லவில்லை.

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரது கணவர் நடராஜன். இவரது அக்காள் வனரோஜா. 74 வயதான இவர் உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் மரணமடைந்தார்.

இவரது மறைவிற்கு அதிமுக எம்பி. பரசுராமன், பால்வளம் காந்தி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், திமுக, சிபிஐ உள்ளிட்ட மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

சசிகலாவின் கணவரான எம். நடராஜனும் தனது அக்காள் மறைவிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிலையில், சசிகலாவும் வருவார் என்ற எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி வரை வரவில்லை.

English summary

Sasikala Natarajan was absent from In-law's funeral rites in Tanjore.