சென்னை: சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை 13 நாட்களுக்குப் பின் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் விசாரணை கைதியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர் கடந்த 18-ந் தேதி அன்று திடீரென்று மின்சார ஒயர்களை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

கொலையா?

ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது;

ராயப்பேட்டை மருத்துவமனையில்...

ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார். ராம்குமாரின் உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் நிராகரிப்பு

ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்து. அரசு மருத்துவர்கள் 4 பேர் குழுவுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் கே குப்தாவும் இணணந்து ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நடத்துவார் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடங்கியது

இதையடுத்து சுதிர் குப்தா இன்று சென்னை வருகை தந்தார். சென்னை மருத்துவர்கள் 4 பேருடன் இணைந்து அவரும் தற்போது பிரேத பரிசோதனையில் பங்கேற்றுள்ளார்.

காயங்கள் புகார்

இதனிடையே ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பயனில்லை..

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

English summary

Swathi Murder case Accused Ramkumar's body autopsy to be held today in Chennai.