செயிண்ட்லூயிஸ்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் வேட்பாளாருக்கான இரண்டாவது நேரடி விவாதத்தில், ஹிலரிக் ளிண்டனை ஜெயிலில் தள்ளுவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது விவாவதம், செயிண்ட் லூயிஸ்நகரின் வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் நடைபெற்றது.

நான் அமெரிக்க அதிபர் ஆனால் ஹிலரி டெலிட் செய்த 33 ஆயிரம் இமெயில்கள் குறித்து சிறப்பு அட்டார்னி ஜெனரல் நியமித்து விசாரணை மேற்கொள்வேன்.

விசாரணை முடித்து ஹிலரியை ஜெயிலில் தள்ளுவேன் என்று கூறினார். அதைப் பார்த்த நெறியாளர்கள் மார்த்தா, ஆண்டர்சன் உட்பட பார்வையாளார்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் ஹிலரி க்ளிண்டன் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். மெயில் விவகாரம் குறித்து ஹிலரி பேசுகையில், "தனி சர்வரில் அரசு மெயில் அனுப்பியது தவறுதான்..பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அவற்றில் அரசு ரகசியம் பற்றிய தகவல்கள் எதுவும் பரிமாறப்படவில்லை. அரசு விசாரணையிலும் அரசின் ரகசிய தகவல்கள் தனி சர்வரிலிருந்து செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு அரசு ரகசியம் காப்பது குறித்து நன்றாகவே தெரியும்," என்றார்.

நான் பேசினேன்...பில் க்ளிண்டன் செய்தார்!

வெள்ளிக் கிழமை வெளியான ட்ரம்பின் 2005 வீடியோ பற்றிய கேள்விக்கு, மிகவும் நாகரீகமாக ஹிலரி பதிலளித்தார்.

"நான் முதலில் இருந்தே ட்ரம்ப் அதிபர் பதவிக்கு லாயக்கற்றவர் என்று சொல்லி வருகிறேன். இந்த வீடியோ அதை உறுதிப்படுத்துகிறது. பெண்களை எவ்வளவு இழிவாக ட்ரம்ப் நடத்துகிறார் என்பதற்கு இது கூடுதல் சான்று," என்றார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "நான் பேசியது தவறுதான். ஆனால் அது வெளிப்படையாகப் பேசவில்லை. லாக்கர் ரூமில் பேசியது. அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் பேசமட்டுமே செய்தேன் ஆனால் அதிகார துஷ்பிரயோகம் செய்து பில் க்ளிண்டன் செயலில் காட்டினார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கே பார்வையாளர்களாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்," என்றார்.

பில் க்ளிண்டன் பற்றிய ட்ரம்பின் குற்றச் சாட்டுக்கு சாமர்த்தியமாகப் பதிலளிக்காமல், வேறு விசயங்களுக்குத் தாவிவிட்டார் ஹிலரி. விவாதத்தில் சூடு கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட வீடியோ விவகாரம் பிசுபிசுத்து விட்டது.

ஆள் திரட்டி கூட்டி வந்த பில் க்ளிண்டனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ட்ரம்ப் கூறிய பெண்கள் பற்றி எந்த ஒரு விளம்பரமும் வரவிடாமல் ஹிலரி பார்த்துக் கொண்டார்.

இன்றைய விவாதத்தில் ஹிலரியை ஜெயிலில் தள்ளுவேன் என்று ட்ரம்ப் கூறியது தான் மிகப் பெரிய பேச்சாக உள்ளது. ஒரு பெண்ணிடம் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறாரே என்று அதுவும் அவருக்கு எதிராகத் திரும்பினாலும் ஆச்சரியமில்லை.

English summary

During the second Presidential debate, Dolnald Trump told , he will appoint a special Attorney General to investigate personal email server and alleged 33000 deleted emails. At the end of enquiry, Hillary will be sent to Jail, Trump told to the audience. Also, the 2005 tape issue was not a major discussion of the debate, as widely expected.

News7Paper