சென்னை: காவிரி பிரச்சினை காஷ்மீர் வரைக்கும் போய் விடும் போல. அந்த அளவுக்கு பெரிதாக்க விட்டன கன்னட அமைப்புகள். இவர்களின் வன்முறையைப் பார்த்து பலரும் முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளனர். இப்படியா அடித்துக் கொள்வார்கள் என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் பெயரில் உலவும் ஒரு டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட் உலவுகிறது. அது கர்நாடகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வன்முறையாளர்களின் நெற்றிப் பொட்டில் ஓங்கி அடிக்கும் அளவு உள்ளது.

https://twitter.com/SirSehwag_/status/775265493049610241

அந்த டிவிட்டில், நாம் பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரை பங்கிட்டுக் கொள்கிறோம். இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இங்கே கர்நாடகா, பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இது ஷேவாக்கின் அதிகாரப்பூர்வ பக்கம் கிடையாது. ஏதோ போலியான முகவரி. இருப்பினும் இதில் கூறப்பட்டுள்ள விஷயம் நிச்சயம் யோசிக்க வேண்டியது!

English summary

Here is a tweet which says that India and Pakistan have no issues regarding sharing the Indus river water. But Karnataka is refusing to give water to Tamil Nadu.