விப்ரோ நிறுவனம் மென்பொருள் சந்தையில் மட்டும் பலதுறைகளில்வர்த்தகம் செய்து வருவது நாம் அனைவருக்குத் தெரியும். இந்நிலையில்தனது நுகர்வோர் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாகஇந்நிறுவனம் சீனாவின் முன்னணி நுகர்வோர் நிறுவனத்தைமுழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.

சீன நுகர்வோர் சந்தையில் முன்னணி எப்எம்ஜிசி நிறுவனமானZhongshan Ma Er நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் தனது சிங்கப்பூர்நிறுவனமான விப்ரோ பிடிஈ நிறுவனத்தின் வாயிலாகக் கைப்பற்றமுடிவு செய்துள்ளது விப்ரோ நிர்வாகம்.

இதன் மூலம் தென் சீன பகுதியில் வளர்ந்து வரும் தனது பர்சன்ல் கேர்வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் எனவும் அதிகளவிலானவர்த்தகத்தை அடைய முடியும் எனவும் நம்புகிறது விப்ரோ.

Zhongshan Ma Er நிறுழநம் சீனா மட்டும் அல்லாமல் ஹாங்காங்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.இந்நிறுவனத்தின் பர்சனல் கேர் பிராண்டான ஈனெர், ஜிக், விசின்க்,ஆடை பிரண்டான ஃபாபில், சுநீவ் ஆகியவை சீனா, ஹாங்காங்பகுதியில் மிகவும் பிரபலம்.

English summary



wipro acquiring chinese FMGC compant to strengthen consumer care business


News7Paper