சென்னை: தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக சிறப்புமுகாம் இன்று நடைபெற்று வருகிறது.
அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பட்டவர்கள் பதிவு செய்வதற்கும், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 16 தொகுதிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஒரே தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதற்கான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் வருகின்ற 30.ம் தேதிக்கள் மாநகராட்சி மண்டலங்களில் விண்ணப்பிக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க... தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் ஏற்பாடு
English summary
Special camps for summary revision of voter list is happening across the state today.
TAGS :
COMMENTS