பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகா எம்.பி புட்ட ராஜு தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவையடுத்து கர்நாடகத்தில் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி புட்ட ராஜு தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், மக்களவை தலைவரை நாளை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு... கர்நாடகா எம்.பி. புட்ட ராஜூ ராஜினாமா !
English summary
Mandya Sitting MP CS Puttaraju resigned over the verdict of the Supreme Court on Cauvery.
TAGS :
COMMENTS