சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவும் திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புதிய படங்களை அதிமுக பிரமுகர் பிசி சத்தீஸ் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

சசிகலா புஷ்பாவும் திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. ஆனால் அந்த படங்கள் அனைத்துமே போலியானவை என கூறப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா சரமாரியாகத் தாக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக சசிகலா புஷ்பாவிடம் முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்தினார். ஜெயலலிதாவை விமர்சித்ததாலேயே திருச்சி சிவாவை தாக்கியதாக சசிகலா புஷ்பா கூறினார்.





கதறி அழுத சசிகலா புஷ்பா



அப்போது சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவிலோ, ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்தார்... ஒரு எம்.பி.க்கே பாதுகாப்பு இல்லையா? என கதறி அழுதார் சசிகலா.








கலகக் குரல்



அவர் ராஜ்யசபாவில் அழுது கொண்டு இருக்கும்போதே அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனால் தாம் தொடர்ந்து எம்.பி.யாக நீடிப்பேன் என ஜெயலலிதாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்.








புதிய படங்கள் ரிலீஸ்



இதனிடையே சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி பொருளாளரான சிந்ததாரிப்பேட்டை பிசி சத்தீஸ் என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா இருவரும் நெருக்கமாக இருக்கும் 6 புதிய படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்களில் சசிகலா புஷ்பாவுக்கு சடை போட்டுவிடுவது உள்ளிட்டவை அடக்கம்.






நீக்காத சசிகலா புஷ்பா



இந்தப் படங்களை சசிகலா புஷ்பா பெயரிலான ஃபேஸ்புக் முகவரிக்கும் டேக் செய்திருக்கிறார். சசிகலா புஷ்பாவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இது நீக்கப்படாமல் உள்ளது.








படங்கள் உண்மையே



இந்த படங்களின் உண்மை குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த அதிமுக பிரமுகர் சதீஸை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தாம் வெளியிட்ட அனைத்து படங்களும் உண்மையானவை தான் என உறுதிப்படுத்தினார்.








மனைவியை பாராட்டும் நாள்..



இன்று மனைவியை பாராட்டும் நாள் என உலகம் கொண்டாடி வருகிறது.. திருச்சி சிவா தம் மனைவி இறந்த போது, மனைவியிடம் பேசுங்கள் என உருக்கமாக கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது மனைவியை பாராட்டும் நாளில் அதிமுகவினர் திருச்சி சிவா- சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் இந்த படங்களை ரிலீஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
English summary

ADMK functionary BC Sathish posted new photos of Expelled ADMK MP Sasikala pushpa with DMK MP Trichy Siva.