டெல்லி: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.

இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோருக்கு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. அனைத்துக் கட்சிகளின் கருத்தையும் இந்த விஷயத்தில் கேட்டறிய மத்திய அரசு முனைந்துள்ளது. அவர்களின் அனுபவங்கள், ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ள உள்ளது.

English summary

Government calls an all party meeting at 4pm today after Indian Army conducts surgical strikes in Pak territory.

News7Paper