பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தை பாஜக கலந்துகொள்ளவில்லை.
காவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்து வருகிறது.
இந்த கூட்டம் கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதாவில் நடைபெற்று வருகிறது. இதில், முன்னாள் பிரதமர் தேவ கெளடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாராசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
காவிரி விவகாரம் பற்றி ஆலோசிக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
English summary
All party meet underway on Cauvery. Congress and JD(S) at meet, BJP boycotts.
TAGS :
COMMENTS