அமெரிக்க டெக் உலகில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரி யார் என்று தெரியுமா?

'தி டைமிஸ்' பத்திரிக்கையின் ஆண்டு சர்வேயின் படி அமெரிக்காவில் அதிகம் சம்பளம் பெறும் 200 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் இருந்து உங்களுக்காக 10 பேர் கொண்ட பட்டியல் மற்றும் இங்கு அளிக்கிறோம்.

கூகுள், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரிகள் அதிகம் பெறுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இதில் உள்ள ஆச்சர்யங்கள் பார்ப்போம் வாருங்கள்.

இதோ உங்களுக்கான அந்தப் பட்டியல்...

இந்தியாவில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள தலைம..." data-gal-src="tamil.goodreturns.in/img/600x100/2014/03/05-1-satya-nadella-quotes.jpg">


சத்ய நாடெல்லா, மைக்ரோசாப்ட்



முதல் இடத்தில் உள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாடெல்லா.

இந்தியாவில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள தலைமை செயல் அதிகாரிகளில் நான்காவது இடத்திலும் டெக் சிஈஓ வில் முதல் இடத்திலும் உள்ளார்.

இவரது அடிப்படை சம்பளம் 918,917 டாலர்கள், 3,600,000 டலார்கள் போனஸ், 12,729 டாலர்கள் ஊக்கத்தொகையாகப் பெறுகிறார். வருடத்திற்கு 84,308,755 டாலர்களை ஊதியமாகப் பெறுகிறார்.

 








நிக்கோலஸ் டி வூட்மேன், கோப்ரோ



அமெரிக்க தலைமை செயல் அதிகாரிகளில் 15 வது இடத்திலும் டெக் நிறுவனங்களில் இரண்டாம் இடத்திலும் உள்ளார் கோப்ரோ நிறுவனத்தின் தலிமை செயல் அதிகாரி நிக்கோலஸ் டி வூட்மேன். இவரை அனைவரும் நிக் வூட்மேன் என்றே அழைப்பார்கள்.

இவரது அடிப்படை சம்பளம் 800,000 டாலர்கள், 31,893,600 டலார்கள் போனஸ், 47,525 டாலர்கள் ஊக்கத்தொகையாகவும் வருடத்திற்கு 77,427,175 டாலர்கள் ஊதியமாகப் பெறுகிறார்.

 




அதில் அடிப்படை ச..." data-gal-src="tamil.goodreturns.in/img/600x100/2016/09/30-1475221621-lawrencejellison.jpg">



லாரன்ஸ் ஜே எலிசன், ஆரக்கிள்



அரக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரன்ஸ் ஜே எலிசன் வருடத்திற்கு 67,261,251 டாலர்கள் ஊதியமாகப் பெறுகிறார்.

அதில் அடிப்படை சம்பளம் 1 டாலரும், போனஸாக 741,384 டலார்களும் ஊக்கத்தொகையாக 1,540, 266 டலர்களும் பெறுகிறார்.

 








ஸ்டீவன் எம் மொல்லென்காப், குவால்காம்



குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவன் எம் மொல்லென்காப் நான்காவது இடத்திலும், வருடாந்திர சம்பளமாக 60,740,592 டாலரும் அடிப்படை சம்பளமாக 1,069,239 டாலர்களும் பெறுகிறார்.

அதுமட்டும் இல்லாமல் போனசாக 1,550,000 டாலரும் ஊக்கத்தொகையாக 121,150 டாலரும் பெறுகிறார்.

 




இவர் வருடாந்திர சம்பளமாக 42,08..." data-gal-src="tamil.goodreturns.in/img/600x100/2016/02/03-1454500567-14-1394781846-8marissamayer.jpg">



மரிசா மேயர், யாஹூ



யாஹூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் இந்த பட்டியலில் உள்ள முதல் பெண் தலைமை செயல் அதிகாரி ஆவர்.

இவர் வருடாந்திர சம்பளமாக 42,083,508 டாலர் பெறுகிறார், அதில் 1,000,000 டாலர் அடிப்படை சம்பளமாகவும், 11,08,800 டாலர் போனசாகவும், 28,065 டாலர் ஊக்கத்தொகையாகவும் பெறுகிறார்.

 








சுந்தர் பிச்சை, கூகுள்



இந்தியாவை சேர்ந்த சுந்த பிச்சை 50 மில்லியன் டாலர் சம்பளத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதில் இவரது 142 மில்லியன் கூகுள் பங்குகளும் அடங்கும்.








மார்க் பெனியாஃப், சேல்ஸ்ஃபோர்ஸ்



சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் வருடாந்திர சம்பளமாக 39,907,534 டாலரும், அதில் அடிப்படை சம்பளம் 1,440,000 டாலரும், போனஸ் 2,816,640 டாலரும், ஊக்கத்தொகை 1,291,541 டாலரும் அடக்கம்.








சக்கரி நெல்சன், நெட்சூட்



கிளவுட் மெபொருள் தயாரிக்கும் நிறுவனமான நெட்சூட்டின் தலைமை செயல் அதிகாரியான சக்கரி நெல்சன் ஆண்டு சம்பளமாக 31,640,991 டாலருடன் 7 வது இடத்தில் உள்ளார்.

இவரின் அடிப்படை சம்பளம் 500,000 டாலரும், போனஸ் 530,782 டாலரும், ஊக்கத்தொகை 8,908 டாலரும் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 








பிரையன் எல் ராபர்ட்ஸ், காம்காஸ்ட்



கேபிள், இண்டர்னெட் மற்றும் ஃபோன் நிறுவனமான காம்காஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் எல் ராபர்ட்ஸ் 26,465,565 டாலர் சம்பளத்துடன் 8 வது இடத்தில் உள்ளார்.








மைக்கேல் ஜே செய்லர், மைக்ரோஸ்டேடர்ஜி



வணிக நுண்ணறிவு மற்றும் கிளவுட் நிறுவனமான மைக்ரோஸ்டேடர்ஜி நிறுவனத்தின் தலைவருமான மைக்கேல் ஜே செய்லர் 9 வது இடத்திலும், ஆண்டு சம்பளமாக 24,101,665 டாலரும் பெறுகிறார்.








மார்கரெட் சி விட்மன், எச்பி



எச்பி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்கரெட் சி விட்மன் 19,612,164 டாலர் ஆண்டு சம்பளத்துடன் 10வது இடத்தில் உள்ளார்.
English summary



10 highest paid tech CEOs in the US