சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் ஏவப்படுகிறது. அதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன், அமெரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளின், எட்டு செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள் 3, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும். இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.இதற்கான கவுண்டவுன் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கியது. இந்திய ராக்கெட் ஒன்று இரு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.

English summary

The ISRO is all set to add another feather in its cap as it gears up for its longest-ever PSLV rocket launch mission in a few hours today September 26.

News7Paper